இலங்கையில் டெங்கு மற்றும் சிகுங்குனியா நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என துணை சுகாதார அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
இவ்விரு நோய்களும் பொதுச் சுகாதார சிக்கலாக மாறிக் கொண்டிருக்கின்றன என்றும், காய்ச்சலுக்கு உடனடியாக மருத்துவமனையில் பரிசோதனை பெற வேண்டுமென அவர் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மருந்துப்பற்றாக்குறை தொடர்பாகவும் அவர் விளக்கம் அளித்தார். அதில், 180 வகை மருந்துகள் இல்லையெனச் சொல்லப்பட்டாலும், தற்போது உண்மையில் 45 மருந்துகள் மட்டுமே குறைவாக உள்ளன என்று அவர் தெரிவித்தார்.