நாடளவில் 24 முக்கிய நீர்த்தேக்கங்கள் திறக்கப்பட்டுள்ளன

 நாட்டின் பல பகுதிகளில் பெய்த கனமழையால், நீர்வள திணைக்களத்திற்கு உட்பட்ட 24 முக்கிய நீர்த்தேக்கங்கள் தற்போது நீரை வெளியேற்றுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் தலா 6 நீர்த்தேக்கங்கள், அனுராதபுரத்தில் 4, பதுளை, குருநாகல், மோனராகல மற்றும் திரிகுணாமலை மாவட்டங்களில் தலா 2 நீர்த்தேக்கங்கள் நீர் வெளியேற்றுகின்றன. இவை தவிர, 16க்கும் அதிகமான நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் திறக்கப்பட்டுள்ளன. முக்கிய மற்றும் நடுத்தர நீர்த்தேக்கங்களில் சேமிக்கக்கூடிய மொத்த நீர்திறன் 91% அளவில் நிரம்பியுள்ளதாக நீர்வள திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.