ஏப்ரல் 22 இரவு மாத்தறை சிறையில் ஏற்பட்ட பதற்ற நிலை தற்போது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
ஒரு கைதியை வேறு சிறையிற்குத் மாற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டபோது சில கைதிகள் எதிர்ப்பை வெளியிட்டதன் காரணமாக கலகம் ஏற்பட்டது. அவர்கள் ஒழுங்கற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டதால், அதிகாரிகள் வானில் எச்சரிக்கை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.
இன்று காலை கைதிகள் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த டியர் கேஸ் வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிலைமையை மேலும் கட்டுப்படுத்த காவல் விசேட அதிரடிப்படை (STF) குழுவும் அனுப்பப்பட்டுள்ளதென காவல்துறை தெரிவித்தது.
இந்நிலையில், சிறை வெளியே பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் STF அதிகாரிகள் கடமையாற்றுகின்றனர். விசாரணைகள் தொடரும் என சிறைதுறை தெரிவித்துள்ளது.