உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள மே தின அணிவகுப்புகளுக்காக காவல்துறை விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டு திட்டங்களை அமல்படுத்த உள்ளதாக காவல் துறை ஊடக பிரிவு அறிவித்துள்ளது. மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் நடைபெறும் அணிவகுப்புகள் மற்றும் நிகழ்வுகளுக்காக மாகாண மற்றும் மாவட்ட பொறுப்பதிகாரிகளுக்கு தேவையான வழிகாட்டல்களும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. கொழும்பு நகரத்தில் மட்டும் 15 இடங்களில் மே தின நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இதனால் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வாகன ஓட்டுனர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தேவையான சந்தர்ப்பங்களில் போக்குவரத்து பொலிஸாரிடம் மாற்று வழிகளுக்கான தகவல்களைப் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.