2024 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகளின்படி, 237,026 மாணவர்கள் உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல், ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார். இது பரீட்சையில் தோன்றிய மாணவர்களின் 73.45% ஆகும்.
அத்துடன், 13,392 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ‘A’ தரம் பெற்று சிறப்பாக தோன்றியுள்ளனர். இது மொத்த பரீட்சை எழுதும் மாணவர்களில் 4.15% ஆகும்.
மேலும் 2.34% மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளனர்.