உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை (பெயர் குறித்த நியமனப் பத்திரங்கள்) தாக்கல் செய்யும் போது அவை நிராகரிக்கப்படும் காரணங்களை தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படக்கூடிய முக்கிய காரணங்களில் *பூரணமாக நிரப்பப்படாத தகவல்கள், சட்டப்படி தேவைப்படும் ஆவணங்களின் குறைபாடு, தவறான அல்லது முரணான தகவல்கள், தேவையான கட்சித் தலைவர் அல்லது பிரதிநிதியின் உடன்படிக்கையின் பற்றாக்குறை* போன்ற விடயங்கள் அடங்கும்.
எனவே, வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் கட்சிகள்/கூட்டணிகள், *வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் போது அனைத்து சட்ட விதிமுறைகளையும் பூரணமாக பின்பற்றுவது அவசியம்* என்று தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.